ADDED : ஜூலை 15, 2025 09:14 PM

விழுப்புரம்; விழுப்புரம் அருகே ப.வில்லியனுார் கிராமத்தில் மும்மூர்த்தி விநாயகர், பூரணி புஷ்கலை சமேத அய்யனாரப்பன், முத்துமாரியம்மன், செல்லியம்மன், திரவுபதி அம்மன் ஆகிய 5 கோவில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 10ம் தேதி காலை 6:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் வழிபாடு துவங்கியது. தொடர்ந்து, கணபதி, லட்சுமி, நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தன.
அடுத்தடுத்த தினங்களில் வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு கடம் புறப்பாடு மற்றும் புனித நீர் கொண்டுவரப்பட்டு காலை 7:30 மணிக்கு, மும்மூர்த்தி விநாயகர் கோவிலிலும், தொடர்ந்து அய்யனாரப்பன், முத்துமாரியம்மன், செல்லியம்மன், திரவுபதி அம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ப.வில்லியனூர், கணக்கன்பாளையம் மக்கள் செய்தனர்.