/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொர்ணவாரி பருவத்தில் நெல் நடவு பணி தீவிரம்
/
சொர்ணவாரி பருவத்தில் நெல் நடவு பணி தீவிரம்
ADDED : ஏப் 25, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், நவரை, சம்பா, சொர்ணவாரி பருவங்களில் நெல் நடவு செய்து வருகின்றனர். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான சொர்ணவாரி பருவத்தில் தற்போது விவசாயிகள் நெல் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக கடந்த மாதம் நாற்றாங்காலில் நெல் நாற்று விடும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, நிலங்களை உழுது, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.