/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் வீணாகியது! குறுவை பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்
/
கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் வீணாகியது! குறுவை பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்
கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் வீணாகியது! குறுவை பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்
கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் வீணாகியது! குறுவை பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்
ADDED : அக் 28, 2025 06:04 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், குறுவை சாகுபடிக்கான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால்,தொடர் மழையால் 50 சதவீதம் நெற்பயிர்கள் நனைந்து நஷ்டத்தை சந்தித்துள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு குறுவை சாகுபடி நெற்பயிர், விழுப்புரம், செஞ்சி, வல்லம், கண்டமங்கலம் தாலுக்காக்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டது.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடவு செய்த நெல், செப்டம்பர் முதல் அறுவடை தொடங்கி நடந்து வந்தது. இதற்காக ஆண்டு தோறும், ஒன்றியங்கள் வாரியாக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். இதற்காக, விவசாயிகள் காத்திருந்தனர்.
ஆனால், செப்டம்பர் இறுதிவரை திறக்காத நிலையில், காத்திருந்த விவசாயிகள் பலர், நெல் அறுவடை செய்து, தனியார் வியாபாரிகளிடம் வழங்கி வந்தனர். திடீரென தொடர் மழை பெய்ததால், நெல் அறுவடை பணிகள் பாதித்தது. காற்றில் நெற்பயிர்களும் மடிந்தன.
தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையும் தொடங்கி பரவலாக பெய்ததால், முழுமையாக அறுவடை முடியும் முன்பே பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதித்தது.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், அக்டோபர் மாத தொடக்கத்திலாவது, நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி வந்தனர். ஆனால், திறக்காததால், விழுப்புரம், வல்லம், கண்டமங்கலம் தாலுக்காக்களில் பெரும்பாலான நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கி பாதித்தது.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க செயலாளர் முருகையன் கூறியதாவது:
இந்தாண்டு குறுவை சாகுபடி அதிகளவில் இருந்தது. இதற்காக, கடந்த செப்டம்பரில் திறக்க வேண்டிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அக்டோபர் வரையும் திறக்கவில்லை. இதனால், நம்பி காத்திருந்த விவசாயிகள் பலர் மழையால் பாதிக்கப்பட்டனர்.
செப்டம்பர் மாத இறுதியில் அவசர, அவசரமாக இயந்திர அறுவடை நடந்து, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் பாதித்தது. தனியார் வியாபாரிகளிடம் ஒரு மூட்டை 1,450 ரூபாய் என ந ஷ்டத்திற்கு விற்றனர்.
அரசு தரப்பில் நெல்கொள்முதல் நிலையம் திறந்திருந்தால், மூட்டை 1,980 ரூபாய்க்கு எடுப்பார்கள்.
அறுவடை காலங்களில், கொள்முதல் நிலையம் திறக்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்துவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் 15 நெல் கொள்முதல் நிலையம் திறப்பார்கள்.
ஆனால், இந்தாண்டு அறுவடை முடிந்து, தொடர் மழையின் போது, கடந்த அக்டோபர் 10 தேதி பெரியசெவலை, கண்டமங்கலம் அடுத்த பாக்கம் பகுதியில் என, 2 கொள்முதல் நிலையங்களை தான் திறந்தனர். அதுவும் மழையால் உடனே மூடிவிட்டனர்.
மாவட்டத்தில், இந்தாண்டு அரசின் அலட்சியத்தால், 50 சதவீதம் குறுவை பயிர்கள் அறுவடை நேரத்தில் மூழ்கி வீணா னது. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு முருகையன் கூறினார்.

