/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட அளவிலான கலை திருவிழா: மாணவ, மாணவிகள் அசத்தல்
/
மாவட்ட அளவிலான கலை திருவிழா: மாணவ, மாணவிகள் அசத்தல்
மாவட்ட அளவிலான கலை திருவிழா: மாணவ, மாணவிகள் அசத்தல்
மாவட்ட அளவிலான கலை திருவிழா: மாணவ, மாணவிகள் அசத்தல்
ADDED : அக் 28, 2025 06:05 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடங்கிய மாவட்ட அளவிலான கலை திருவிழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் தனித்திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.
விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில், இந்தாண்டுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது. விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி மையத்தில் நடந்த போட்டியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் சேகர், உதவி திட்ட அலுவலர் நாகமணி மற்றும் தலைமை ஆசிரியர்கள் குழுவினர் ஒருங்கிணைத்தனர். பல்வேறு தனித்திறன், குழு போட்டிகளில் மாணவ, மாணவிகள் அசத்தினர். முதுகலை ஆசிரியர்கள் குழுவினர் நடுவர்களாக பங்கேற்றனர்.
விழுப்புரம் அரசு மகளிர் பள்ளி, காமராஜ் நகராட்சி பள்ளி, நகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் கலை திருவிழா போட்டிகள் நடக்கிறது.
மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டியில், பசுமையும், பாரம்பரியமும் தலைப்பில், நாட்டுப்புற நடனம், பரதம், ஓவியம், நாடகம், இசை கருவிகள் வாசித்தல் என 100 விதமான போட்டிகள் நடக்கிறது.
இதில், வட்டார அளவிலான போட்டிகளில் தேர்வான 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை யிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தாண்டு 2,870 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான இந்த கலை திருவிழா போட்டியில் பங்கேற்றனர். இதில், தேர்ச்சி பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

