ADDED : நவ 01, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் நடந்தது.
அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.
அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏஞ்சலின் தொடங்கி வைத்தார்.
நடுவர்களாக ஜெயக்குமார், ஆசிவேல்குமரன் செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டன.