/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
/
விக்கிரவாண்டியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
ADDED : ஜூலை 12, 2025 03:46 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.,பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணம் மேற்கொண்டு மாவட்ட செயலாளர் சண்முகத்துடன் விக்கிரவாண்டிக்கு வந்தார்.
அப்போது, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் பிரஸ் குமரன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் செண்பக செல்வி குமரன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் ஜெயமூர்த்தி , மாவட்ட பிரதிநிதி ராஜாங்கம், ஒன்றிய பாசறை பொருளாளர் முனு ஆதி, கிளை செயலாளர் ஜெயவரதன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.
தொடர்ந்து பேண்டு வாத்தியம் முழங்க, பெண்கள் கும்மியடித்து கோலாட்டத்துடன் நடனமாடி பழனிசாமியை வரவேற்றனர்.