/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழனிவேலு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் எஸ்.பி.,க்கு நினைவு பரிசு வழங்கல்

ADDED : ஜூலை 19, 2025 03:07 AM

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மற்றும் தாளாளர், எஸ்.பி.,க்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடந்தது. இக்கண்காட்சியில் கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன் மற்றும் மாணவர்கள் எஸ்.பி சரவணனுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், டி.ஐ.ஜி உமா உடனிருந்தனர்.