/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழிந்தோடும் கழிவுநீரால் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
வழிந்தோடும் கழிவுநீரால் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 07, 2025 02:00 AM

விழுப்புரம்: விழுப்புரம் பானாம்பட்டு சாலையில் பாதாள சாக்கடை அருகேவுள்ள பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
விழுப்புரம் பானாம்பட்டு சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இச்சாலை ரயில்வே கேட்டிற்கு அருகே பாதாள சாக்கடை மேன்ஹோல் உள்ளது. இங்கு, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மேன்ஹோல் வழியாக வெளியேறி வருகிறது.
கழிவுநீர் பல மாதங்களாக வழிந்தோடியதால் சாலையில் மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது. சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
மூன்று சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி பழுதாகி நிற்கிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள பள்ளத்தை நகராட்சி நிர்வாகம் சரி செய்து, பாதாள சாக்கடை அடைப்பையும் சரிசெய்ய வேண்டும்.