/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.டி.ஓ., அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா
/
பி.டி.ஓ., அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் தர்ணா
ADDED : நவ 05, 2024 07:10 AM

விழுப்புரம்; தேசிய ஊரக வேலைத்திட்டப் பணிகளுக்கு அனுமதி கோரி ஊராட்சித் தலைவர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாலை, நங்காத்தூர், அரியலூர் திருக்கை, மேல்காரணை, வாழப்பட்டு, தெளி உள்ளிட்ட 15 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், நேற்று காலை காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்தனர். இவர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், தங்கள் ஊராட்சி பகுதிக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறுபாலங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் சீரமைப்பதற்காக, அதிகாரிகள் உரிய உத்தரவு வழங்காமல் தாமதப்படுத்துவதாக அதிருப்தி தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காணை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, ஓரிரு நாளில் பணி ஆணை, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து, ஊராட்சி தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.