/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பகுதிநேர ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
/
பகுதிநேர ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ADDED : அக் 21, 2024 04:33 AM

விழுப்புரம் : அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். மாநில தலைவர் முருகதாஸ் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் பெரியசாமி, பொருளாளர் தமிழ்ச்செல்வி, அமைப்பு செயலாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்து 500 பேரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வரும் நவம்பர் 11ம் தேதி, சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது.
டிசம்பர் 10ம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.