/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' நிற்க ஒப்புதல்; பெண்ணாடத்தில் பயணிகள் மகிழ்ச்சி
/
'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' நிற்க ஒப்புதல்; பெண்ணாடத்தில் பயணிகள் மகிழ்ச்சி
'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' நிற்க ஒப்புதல்; பெண்ணாடத்தில் பயணிகள் மகிழ்ச்சி
'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' நிற்க ஒப்புதல்; பெண்ணாடத்தில் பயணிகள் மகிழ்ச்சி
ADDED : மே 01, 2025 06:58 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் ரயில் நிலையத்தில் 'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' எக்ஸ்பிரஸ் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.
விழுப்புரம் - திருச்சி ரயில் மார்க்கத்தில், பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக விழுப்புரம் - மதுரை; திருப்பாதிரிபுலியூர் - திருச்சி பாசஞ்சர் ரயில்களும், சென்னை - குருவாயூர்; குருவாயூர் - சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இங்கு நின்று செல்கின்றன.
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ராக்போர்ட், பல்லவன், வைகை மற்றும் வாராந்திர ரயில்கள் அனந்தபுரி, கன்னியாகுமரி, கவுரா, நிஜாமுதீன் உட்பட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல இப்பகுதி ரயில் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, புதுடில்லியில் நடந்த பாராளுமன்ற கூட்டத்தின்போது, கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் 'பல்லவன் சூப்பர் பாஸ்ட்' எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பல கட்ட ஆய்வுக்கு பின், நேற்று பெண்ணாடம் ரயில் நிலையத்தில் இம்மாதம் (மே) 7ம்தேதி முதல் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் பெண்ணாடம் பகுதி ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.