/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழாக்கால சிறப்பு பஸ்களில் அடாவடி செஞ்சி வர முடியாமல் பயணிகள் அவதி
/
விழாக்கால சிறப்பு பஸ்களில் அடாவடி செஞ்சி வர முடியாமல் பயணிகள் அவதி
விழாக்கால சிறப்பு பஸ்களில் அடாவடி செஞ்சி வர முடியாமல் பயணிகள் அவதி
விழாக்கால சிறப்பு பஸ்களில் அடாவடி செஞ்சி வர முடியாமல் பயணிகள் அவதி
ADDED : ஏப் 15, 2025 04:40 AM
செஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து சென்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் பணியாற்றுகின்றனர். ஆயிரக்கணக்கான பள்ளி கல்லுாரி மாணவர்களும் சென்னையில் படிக்கின்றனர். இதில் பெரும் பகுதியினர் ஏழை, நடுத்தர குடும்பத்தினர். செஞ்சியில் இருந்து சென்னைக்கு நேரடி பஸ்கள் குறைவாக இருப்பதால், திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் பஸ்களில் அதிக பேர் செல்கின்றனர்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என விழா நாட்களில் சாதாரண பஸ்களையும் சிறப்பு பஸ்களாக மாற்றி இயக்குகின்றனர். இதுபோன்ற விழா நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்களில் செஞ்சி பயணிகளை ஏற்றுவதில்லை. பஸ்சில் ஏறினாலும் கட்டாயப்படுத்தி இறக்கி விடுகின்றனர். தமிழ் புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்ல கடந்த 12ம் தேதி கிளாம்பாக்கம் வந்த கல்லுாரி மாணவிகளை, திருவண்ணாமலைக்கு சென்ற சிறப்பு பஸ்களில் ஏற்ற மறுத்தனர்.
பஸ் செஞ்சி வழியாக செல்லாது, பைபாஸில் செல்லும் என கூறினர். கெஞ்சிய மாணவிகளிடம், திருவண்ணாமலைக்கான பஸ் கட்டணம் வாங்கி கொண்டு பஸ்சில் ஏற்றினர். செஞ்சி பைபாஸ் வந்தவுடன், மாணவிகளிடம் கொடுத்த டிக்கெட்டை வாங்கி கொண்டு இறக்கி விட்டு சென்றனர். முக்கிய விழா நாட்களில் செஞ்சிக்கு வரும் பொது மக்கள், கல்லுாரி மாணவர்கள் இப்பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
மாலை நேரத்தில் கிளாம்பாக்கம் வரும் கல்லுாரி மாணவ மாணவிகள், பஸ் கிடைக்காத பிரச்னையில் திரும்பவும் விடுதிக்கு திரும்ப முடியாமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, விழா நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து செஞ்சிக்கு தனி பஸ்களை இயக்கவும், செஞ்சி பயணிகளிடம் திருவண்ணாமலைக்கான கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.