/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காங்., கட்சியினர் அமைதி ஊர்வலம்
/
காங்., கட்சியினர் அமைதி ஊர்வலம்
ADDED : ஏப் 27, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : ஜம்போதி கிராமத்தில் காங்., சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.
செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தில் செஞ்சி வட்டார காங்., சார்பில் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது.
செஞ்சி வட்டார காங்., தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார விவசாய அணி தலைவர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தார்.
விவசாய அணி மாவட்ட தலைவர் ஜோலதாஸ், சிறுபான்மையினர் மாவட்ட தலைவர் சையத் மாலித், அனந்தபுரம் நகர தலைவர் முகமது இந்திரிஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கிராம கமிட்டி தலைவர் பரமசிவம் நன்றி கூறினார்.