/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடியிருப்பை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி
/
குடியிருப்பை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி
ADDED : அக் 16, 2024 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடர் மழையால் நரிக்குறவர் காலனி பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் நகரில், நேற்று மதியம் 1:00 மணிக்கு மேல் பரவலாக மழை பெய்யத் துவங்கியது.
இந்த மழை தொடர்ந்து பெய்ததால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், கீழ்பெரும்பாக்கம் தரைபாலத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்த செல்ல சிரமப்பட்டனர்.
அதே போல், கே.கே., ரோடு, ஆசாகுளம் நரிக்குறவர் காலனி பகுதியில் மழைநீர் சூழ்ந்தது.
இந்த தண்ணீரை கடந்து வெளியேறி செல்ல முடியாமல், நரிக்குறவர் காலனி மக்கள் அவதியடைந்தனர்.