/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நல்லாவூர் கிராமத்தில் சாலை பழுது மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதி
/
நல்லாவூர் கிராமத்தில் சாலை பழுது மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதி
நல்லாவூர் கிராமத்தில் சாலை பழுது மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதி
நல்லாவூர் கிராமத்தில் சாலை பழுது மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதி
ADDED : ஏப் 04, 2025 04:28 AM

வானுார்: நல்லாவூர் கிராமத்தில் சாலை பழுதடைந்து மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் தொகுதிக்குட்பட்ட நல்லாவூர் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில், பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலை பழுதடைந்து மண் சாலையாக மாறியுள்ளது. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் வசதியும் இல்லாததால், மழைக் காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கி குளம் போல் நிற்கிறது.
இந்நிலையில், நேற்று திடீரென பெய்த மழையில், தண்ணீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
ஒவ்வொரு முறையும் மழை பெய்தால், அப்பகுதியில் சாலை இருக்கும் சுவடே இல்லாமல் குளமாக மாறி விடுகிறது. அந்த பகுதியில் மற்ற தெருக்களில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆனால் மாரியம்மன் கோவில் தெருவில் மட்டும் சாலை சீரமைக்கப்படவில்லை. சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
பொது மக்களின் நலன் கருதி வடிகால் வசதியுடன் கூடிய சாலை வசதியை ஏற்படுத்தித்தர அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.