/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் செப்டிக் டேங்க் கழிவு நீரை திறந்தவர்களை விரட்டிய மக்கள்
/
ஏரியில் செப்டிக் டேங்க் கழிவு நீரை திறந்தவர்களை விரட்டிய மக்கள்
ஏரியில் செப்டிக் டேங்க் கழிவு நீரை திறந்தவர்களை விரட்டிய மக்கள்
ஏரியில் செப்டிக் டேங்க் கழிவு நீரை திறந்தவர்களை விரட்டிய மக்கள்
ADDED : செப் 15, 2025 02:32 AM

செஞ்சி: குடிநீர் வழங்கும் ஏரியில் லாரி மூலம் செப்டிக் டேங்க் கழிவு நீரை திறந்து விட்டவர்களை கிராம மக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்திற்கு அங்குள்ள சித்தேரியில் கிணறு வெட்டி குடிநீர் எடுத்து வருகின்றனர். இந்த ஏரிக்கு வராகநதி கூடப்பட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. நேற்று மதியம் 12:00 மணியளவில் ஏரியில் செப்டிக் டேங்க் கழிவு நீர் கொண்டு வரப்பட்ட லாரியை நிறுத்தி, லாரியில் வந்த நபர்கள் திறந்து விட்டனர்.
இதனைப்பார்த்த கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து அந்த நபர்களை லாரியுடன் விரட்டியடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.