/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணும் பொங்கலையொட்டி செஞ்சி கோட்டையில் குவிந்த மக்கள்
/
காணும் பொங்கலையொட்டி செஞ்சி கோட்டையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலையொட்டி செஞ்சி கோட்டையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலையொட்டி செஞ்சி கோட்டையில் குவிந்த மக்கள்
ADDED : ஜன 17, 2025 06:32 AM

செஞ்சி: காணும் பொங்கல் தினமான நேற்று செஞ்சி கோட்டையை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டைக்கு காணும் பொங்கல் தினமான நேற்று விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இதனால் கோட்டை வளாகம் முழுவதும் சுற்றுலா பயணிகள் நிரம்பியிருந்தனர். ராஜகிரி, கிருஷ்ணகிரி, வெங்கட்ரமணர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் பகுதியிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.
200க்கும் போலீசாரும், 30க்கும் மேற்பட்ட ஊர்காவல் படையினர், இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பு அலுவலர்கள், பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்தும் செஞ்சி கோட்டைக்கு சிறப்பு பஸ்களை இயக்கினர்.
செஞ்சி கோட்டைக்கான சாலை ஒரு வழி சாலையாக உள்ளது. இதில் ஒரு பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தியும், தற்காலிக கடைகளையும் அமைத்தும் சாலையின் அகலத்தை மேலும் குறைத்து விட்டனர். இதனால் சிவன் கோவில் எதிரே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.