/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் மண் எடுக்க மக்கள் எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வாக்குவாதம் விழுப்புரம் அருகே பரபரப்பு
/
ஏரியில் மண் எடுக்க மக்கள் எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வாக்குவாதம் விழுப்புரம் அருகே பரபரப்பு
ஏரியில் மண் எடுக்க மக்கள் எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வாக்குவாதம் விழுப்புரம் அருகே பரபரப்பு
ஏரியில் மண் எடுக்க மக்கள் எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வாக்குவாதம் விழுப்புரம் அருகே பரபரப்பு
ADDED : நவ 21, 2024 12:22 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் வழுதரெட்டி, கொண்டங்கி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிலர், அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி கிராவல் மண் எடுத்து லாரிகள் மூலம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்றும் கிராவல் மண்ணை எடுத்த செல்ல லாரிகள் நின்றிருந்தனர். இதையறிந்ததும், ஆத்திரமடைந்த வழுதரெட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்குள்ள ஏரிக்கு சென்று, கிராவல் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராவல் மணல் எடுக்க நின்றிருந்த பொக்லைன் எந்திரம், லாரிகளையும் சிறைபிடித்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் தாசில்தார் கனிமொழி தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த இடம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம், இடத்தின் பராமரிப்பாளர் மற்றும் மக்களிடம் தகவல் தெரிவிக்காமல் கிராவல் மண் எடுப்பதை ஏற்க முடியாது என மக்கள் தெரிவித்தனர்.
தங்கள் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளி மழைநீரால் சூழ்ந்து மாணவர்கள், நீரில் தத்தளித்த போது பள்ளியை சீரமைக்க, ஏரியில் இருந்து மண் எடுக்க அனுமதி கேட்ட போது, அனுமதி மறுத்தனர். தற்போது மட்டும் ஏரி மண் எடுக்க எப்படி அனுமதி வழங்கினீர்கள் என கேட்டு, அதிகாரிகளோடு கடும் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, ஏரியில் கிராவல் மண் எடுப்பதை கைவிட்டு அங்கிருந்த பொக்லைன் இயந்திரம், லாரிகள் புறப்பட்டதால், பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.