/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடிகால் வசதியில்லாததால் மக்கள் அவதி: விழுப்புரத்தில் வடியாத மழைநீர்
/
வடிகால் வசதியில்லாததால் மக்கள் அவதி: விழுப்புரத்தில் வடியாத மழைநீர்
வடிகால் வசதியில்லாததால் மக்கள் அவதி: விழுப்புரத்தில் வடியாத மழைநீர்
வடிகால் வசதியில்லாததால் மக்கள் அவதி: விழுப்புரத்தில் வடியாத மழைநீர்
ADDED : ஆக 13, 2024 06:18 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் குடியிருப்பு பகுதி மற்றும் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் சூழ்ந்து வடிகால் வசதி இல்லாததால் பல இடங்களில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளது.
விழுப்புரத்தில், கீழ்பெரும்பாக்கம் ரயில்வே தரைப்பாலம், கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள லட்சுமி நகர், திருநகர், கம்பன் நகர், தேவநாத சுவாமி நகர், ஆசிரியர் நகர், ஆசாக்குளம், சாலாமேடு, மாருதி நகர் உட்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இது மட்டுமின்றி, புதிய பஸ் நிலையத்தில் 2வது நாளாக மழைநீர் வடிகால் வசதியின்றி தேங்கியுள்ளது.
இதனால், 2வது நாளாக பயணிகள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
நகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்ததுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கோடை காலங்களில் மழை தண்ணீர் சூழும் பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு நீர் தேங்காத வகையில் வடிகால் வசதியை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் தவறியதால் 10ம் தேதி இரவு மற்றும் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கே பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
நகராட்சியில் தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றும் நீர்மோட்டார் இருந்தும் கூட நீரை வெளியேற்ற ஊழியர்கள் தாமதம் செய்து வருகின்றனர்.
இதனால், மக்கள் பயணிக்கும் முக்கிய கீழ்பெரும்பாக்கம் ரயில்வே தரைபாலத்தில் போக்குவரத்து 2ம் நாளாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகம் செல்வோர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கியமாக மழைநீர் சூழ்ந்த இடங்களான புதிய பஸ் நிலையம், அரசு பள்ளி வளாகங்களில் தண்ணீரை வெளியேற்ற நகராட்சி ஊழியர்கள் யாரும் காலையில் வராததால், பயணிகள், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

