/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் மக்கள் அவதி
சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் மக்கள் அவதி
சாலையோரத்தில் குப்பை துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : டிச 01, 2025 05:28 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை வழியாக, திருப்பச்சாவடிமேடு, கோவிந்தபுரம், ஏனாதிமங்கலம், திருவெண்ணெய்நல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் வழுதரெட்டி ஏரிக்கரை அருகே சாலையோரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சாலையோரத்தில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.