/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் வீடுகளில் கைவரிசை
/
பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் வீடுகளில் கைவரிசை
பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் வீடுகளில் கைவரிசை
பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் வீடுகளில் கைவரிசை
ADDED : ஜன 19, 2025 11:53 PM

விழுப்புரம்: விழுப்புரம், சாலாமேடு அரசு ஊழியர் நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 59; அரசு போக்குவரத்து கழக டிரைவர்.
சொந்த ஊரான விழுப்புரம் அடுத்த அருளவாடி கிராமத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டின் தளம் ஒட்டும் பணிக்காக நேற்று முன்தினம், அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி சென்றனர்.
நேற்று மாலை விழுப்புரம் வீட்டிற்கு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது. விழுப்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, பூம்புகார் சாயாவனம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல், 45; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் காலை குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்று, இரவு 11:30 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 30 சவரன் நகைகள், 80,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பூம்புகார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சென்னத்துாரில் வசிப்பவர் சடையப்பன், 47; சிலை வடிவமைக்கும் சிற்பி. பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த, 14ல் குடும்பத்துடன் சென்றார்.
நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 25 சவரன் நகை, 20,000 ரூபாய் திருடு போயிருந்தது. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.