தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: அரசு நல திட்டங்களை முறையாக வழங்க கோரி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு, விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில், சங்க தலைவர் சுந்தரராசு தலைமை தாங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நல திட்டங்களை முறையாக வழங்குதல்; 100 நாள் வேலை திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு நடவடிக்கை; தகுதி உள்ளவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா; உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தாசில்தார் மகாதேவன் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும், 15 தினங்களில், மனை பட்டா வழங்கவும், மற்ற கோரிக்கைகள் மீது ஒரு மாத காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும், உறுதி கூறினார்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சங்க செயலாளர் கண்ணதாசன் உட்பட தாலுகாவை சேர்ந்த, 240 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us