/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஐ.என்.டி.யு.சி., தலைவர் கோரிக்கை

ADDED : செப் 27, 2024 05:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், குடிநீர் பற்றாக்குறை தீர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் அய்யனார், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மனுவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, அரசு சார்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில், அப்போதைய முதல்வர், விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், ரூ. ஆயிரம் கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.
தண்ணீரில் இருந்து உப்புத்தன்மையை நீக்குவதற்கான திட்டத்திற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிடப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின், மூலதனச் செலவு அதிகம் என்பதால், இத்திட்டம் கைவிடப்படுவதாக கடந்த 2022ம் ஆண்டு அரசு அறிவிப்பு வெளியானது.
எனவே, பொதுமக்களின் அடிப்படை பிரச்னையான குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.