/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைதி ஊர்வலத்திற்கு அனுமதி; எஸ்.பி.,யிடம் த.வெ.க., மனு
/
அமைதி ஊர்வலத்திற்கு அனுமதி; எஸ்.பி.,யிடம் த.வெ.க., மனு
அமைதி ஊர்வலத்திற்கு அனுமதி; எஸ்.பி.,யிடம் த.வெ.க., மனு
அமைதி ஊர்வலத்திற்கு அனுமதி; எஸ்.பி.,யிடம் த.வெ.க., மனு
ADDED : ஜூலை 29, 2025 10:47 PM

விழுப்புரம்; நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு த.வெ.க., சார்பில் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் த.வெ.க., தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்வடிவேல் தலைமையில் கொடுத்துள்ள மனு;
தமிழக அரசு இந்த ஆட்சியில் மட்டும் 842 கோடி ரூபாய் செலவில் நந்தன் கால்வாய் திட்டம் மறுசீரமைப்பு செய்ய அறிவிப்பு வெளியிட்டு செயல்படுத்தாமல் உள்ளது.
பருவமழை துவங்கும் முன் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஈ.மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம் ஏரிகளை நந்தன் கால்வாய் திட்டத்துடன் இணைக்க வேண்டும். நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆக., 11ம் தேதி பனமலை ஏரியில் இருந்து அன்னியூர், கஞ்சனுார் வழியாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு த.வெ.க., சார்பில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு காவல் துறை சார்பில் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, வழக்கறிஞர் பிரிவு குமரேசன், அரவிந்த், நிர்வாகிகள் காமராஜ், பிரித்திவிராஜ், மனோரஞ்சிதம், சம்பத், மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் முத்து, சேகர், மணிராஜ், ஜான்பீட்டர், ஸ்ரீதர் உடனிருந்தனர்.