/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிப்காட்டிற்கு நிலம் கொடுத்தவர்கள் இழப்பீடு வழங்க வலியுறுத்தி மனு
/
சிப்காட்டிற்கு நிலம் கொடுத்தவர்கள் இழப்பீடு வழங்க வலியுறுத்தி மனு
சிப்காட்டிற்கு நிலம் கொடுத்தவர்கள் இழப்பீடு வழங்க வலியுறுத்தி மனு
சிப்காட்டிற்கு நிலம் கொடுத்தவர்கள் இழப்பீடு வழங்க வலியுறுத்தி மனு
ADDED : நவ 13, 2024 04:22 AM

விழுப்புரம் : திண்டிவனம் சிப்காட்டிற்கு நிலம் கொடுத்தவர்கள், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திண்டிவனம் சிப்காட் திட்டத்திற்கு, நிலம் கொடுத்த ராம்லால் ரமேஷ், கந்தசாமி, சேகர், சந்திரபிரகாஷ், செல்வராஜ் உள்ளிட்டோர் நேற்று, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கூறியதாவது: திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு, சிப்காட் திட்டத்திற்காக அரசு சார்பில் சுமார் 700 ஏக்கர் நிலம் கையகம் செய்தனர்.
அதில், பெரும்பகுதியினருக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்காமல் உள்ளது.
அது தொடர்பாக 4 முறை கருத்துகேட்பு கூட்டம் நடத்தியுள்ளனர். பல முறை மனு கொடுத்தும் உரிய இழப்பீடு வழங்கவில்லை. 200க்கும் மேற்பட்டவர்கள், நிலம் கொடுத்துவிட்டு, அதற்குறிய இழப்பீடு தொகை கிடைக்காமல், அதனை விற்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அந்த நிலத்திற்கு, ஏக்கர் நிலம் ரூ.6.50 லட்சம் வரை அரசு தரப்பில் நிர்ணயித்தனர். சதுரடி அளவில் கணக்கிட்டு, சதரடி ரூ.1,000 வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
அந்த பகுதியில் தற்போது, சதுரடி ரூ.1,800 வரை விலை போகிறது. ஆனால், விவசாய நிலம் என்ற அளவில், குறைந்த மதிப்பு போட்டு இழப்பீடு தரப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பல முறை பேச்சுவார்த்தை, கருத்து கேட்பு கூட்டம் நடத்தியும், இழப்பீடு வழங்காமல் உள்ளதால், நிலம் வழங்கியோர் தவிப்பில் உள்ளனர். அரசு தரப்பில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.