/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிறுத்தப்பட்ட நுாறு நாள் வேலை மீண்டும் துவங்கக் கோரி மனு
/
நிறுத்தப்பட்ட நுாறு நாள் வேலை மீண்டும் துவங்கக் கோரி மனு
நிறுத்தப்பட்ட நுாறு நாள் வேலை மீண்டும் துவங்கக் கோரி மனு
நிறுத்தப்பட்ட நுாறு நாள் வேலை மீண்டும் துவங்கக் கோரி மனு
ADDED : ஜூன் 05, 2025 07:15 AM

விக்கிரவாண்டி; ஒரத்துார் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நுாறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தக் கோரி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் துணை பி.டி.ஓ., குமாரியிடம் அளித்துள்ள மனுவில், 'விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேசிய வேலை உறுதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ட செயலாளர் கலியமூர்த்தி, தலைவர் சேகர், நகர தலைவர் பால்ராஜ், மாவட்ட குழு அமுதா உடனிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட துணை பி.டி.ஓ., மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.