ADDED : மார் 15, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் கிராமத்தில் நுாறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, கிளைத் தலைவர் பாலு தலைமை தாங்கினார்.
செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மேரி சாந்தகுமாரி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அர்ஜூனன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, தலைவர் சேகர், மாவட்ட குழு அமுதா, நகர தலைவர் பால்ராஜ், ஒன்றிய பொருளாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மனுவைப் பெற்ற மண்டல துணை பி.டி.ஓ., நாகராஜன் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

