/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபைல் போன் டவர் அகற்றக்கோரி மனு
/
மொபைல் போன் டவர் அகற்றக்கோரி மனு
ADDED : மார் 25, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் காகுப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மொபைல்போன் டவரை அகற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் காகுப்பம் சர்மிளா நகர், கணபதி நகர், பாலாஜி நகர் மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
எங்கள் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மொபைல்போன் டவர் தொடர்பாக மனு அளித்திருந்தோம். அந்த மனுவை அடிப்படையாக கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் நலனுக்கும் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் வகையில் உள்ள மொபைல் போன் டவரை அகற்று வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.