/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டட நிறைவு சான்று பெறுவதில் சிக்கல்; நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் மனு
/
கட்டட நிறைவு சான்று பெறுவதில் சிக்கல்; நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் மனு
கட்டட நிறைவு சான்று பெறுவதில் சிக்கல்; நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் மனு
கட்டட நிறைவு சான்று பெறுவதில் சிக்கல்; நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் மனு
ADDED : மார் 06, 2024 02:16 AM

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், கட்டட நிறைவு சான்று பெற முடியாத வியாபாரிகள் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் நகரில் புதிய கட்டடங்களுக்கு, புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. வணிக உபயோக கட்டடத்திற்கான மின் இணைப்பு பெற நகராட்சி அலுவலகத்தில் இருந்து கட்டட நிறைவு சான்றிதழ் பெற்று வர வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கட்டட உரிமையாளர்கள் பலரும், நகராட்சி அலுவலகத்தில் கட்டட நிறைவு சான்று கோரி, விண்ணப்பம் அளித்து மாதக் கணக்கில் காத்திருக்கின்றனர்.
ஆனால், நகராட்சி அலுவலகத்தில் இருந்து, சான்று வழங்கப்படாமல், அலைகழிக்கப்படுவதாக கட்டட உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
இதன் காரணமாக புதிய கட்டடங்களை கட்டி, கடையை திறந்த வியாபாரிகள் பலரும், தற்காலிக மின் இணைப்பு பெற்று வியாபாரம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்காலிக இணைப்புக்கு அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். பல கடைகளில், வியாபாரத்தில் கிடைக்கும் வருவாய் தொகையை விட, மின் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய நிலை நீடிக்கிறது.
இந்த பிரச்னை குறித்து தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவரது தலைமையில், சங்க நிர்வாகிகள், சென்னையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை (நகராட்சி நிர்வாகம்) அமைச்சர் நேருவை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

