ADDED : டிச 13, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கூடுதல் விலைக்கு விற்க காரில் பெட்ரோல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி, நேற்று விழுப்புரம், பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை செய்தார்.
அப்போது காரில் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க 60 லிட்டர் பெட்ரோல் கடத்தி வந்த, விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டைச் சேர்ந்த எட்டியார், 42; என்பவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

