/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
/
மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : டிச 30, 2025 05:08 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அளவிலான மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, விஜய ஆனந்த் தலைமை தாங்கி னார். தாலுகா நிர்வாகிகள் சவுந்தர்ராஜன், லோகநாதன், கோவிந்தராஜ், அகிலன், சுரேஷ் முன்னிலை வகித்தனர். தாலுகா செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். தொடர்ந்து மருந்தாளுனர் பிரிவு நிர்வாகிகள் பாலாஜி, தாஸ், அரவிந்தன் ஆகியோர் பேசினர். தாலுகா நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அன்பழகன், அமைப்பு செயலாளர் சத்தியசீலன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில், மருந்து வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தாலுகா பொருளாளர் ஹாஜாமொய்தீன் நன்றி கூறினார்.

