/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மைய நுாலகத்தில் புகைப்பட கண்காட்சி
/
மைய நுாலகத்தில் புகைப்பட கண்காட்சி
ADDED : டிச 27, 2024 11:19 PM

விழுப்புரம், ; விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் திருவள்ளுவர் மற்றும் அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி நடந்தது.
மாவட்ட நுாலக ஆணைக்குழு மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து, திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவ சிலை 25ம் ஆண்டு வெள்ளவிழாவை யொட்டி, திருவள்ளுவரின் திருவுருவ படம், திருக்குறள் விளக்க படம், அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட மைய நுாலக வளாகத்தில் நடந்த கண்காட்சியில், திருவள்ளுவர் உருவப்படம், திருக்குறள் தொடர்பான உரைகள், நுால்கள் குறித்த சிறப்பு புகைப்படங்கள், அரசின் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.
இந்த கண்காட்சியை நுாற்றுக்கு மேற்பட்ட நுாலக வாசகர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.