/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு
/
கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு
கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு
கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு
ADDED : பிப் 13, 2024 05:21 AM

விழுப்புரம் நகரில் செல்லும் கோலியனுாரான் வாய்க்காலில் பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைபட்டு கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் தொடங்கி, விழுப்புரம் நகரின் வழியாக கோலியனுார் பகுதி வரை, கோலியனூரான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் விழுப்புரம் நகரின் கழிவு நீர் வெளியேற்றும் முக்கிய வாய்க்காலாக உள்ளது.
விழுப்புரம் நகர பகுதியில் 5 கி.மீ தொலைவிற்கு சிமென்ட் வாய்க்காலாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் துார் வாரப்படாததால் நகர பகுதியில் பல இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
திருச்சி சாலை சந்திப்பில் தொடங்கி, பூந்தோட்டம் ரங்கநாதன் சாலையோரம் செல்லும் இந்த கோலியனுாரான் வாய்க்காலில் பல இடங்களில் சிறு கல்வெர்ட்டுகள் குறுக்கிடும் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைபட்டுள்ளது.
இதே போல், கே.கே.ரோடு சந்திப்பு, சந்தானகோபாலபுரம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துார் வாராததால் செடிகள் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்து அடைபட்டுள்ளது.
இதனால், கழிவு நீர் செல்லாமல் வழிந்து, துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் அடைபட்டுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.