/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மைதானம் சீரமைக்காமல் வீணாவதால் வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு
/
மைதானம் சீரமைக்காமல் வீணாவதால் வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு
மைதானம் சீரமைக்காமல் வீணாவதால் வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு
மைதானம் சீரமைக்காமல் வீணாவதால் வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு
ADDED : நவ 28, 2024 07:25 AM

விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்பு மைதானம் சரியான முறையில் பராமரிக்காததால் விளையாட்டு வீரர்கள் சிரமப்படுகின்றனர்.
விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் இரு மைதானங்கள் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த மைதானத்தை, ரயில்வே நிர்வாகம் சரியான முறையில் பராமரிக்காததால் ஒரு மைதானம் தற்போது வீணாகியும், மறு மைதானம் வீணாகி கொண்டும் வருகிறது. ரயில்வே மருத்துவமனை அருகேவுள்ள மைதானம் போதியளவு பராமரிக்காததால் முட்புதர்கள் மண்டியும் வீணாகியுள்ளது.
அடுத்ததாக, ரயில்வே இன்ஸ்டிடியூட் எதிரேவுள்ள மைதானத்தில் விளையாட்டு வீரர்கள், ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறுகின்றனர். இங்கு, கால் இறுதி, அரை இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு, வெல்வோருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த மைதானம் மழை தருணங்களில் தண்ணீர் தேங்கி, வீணாகிறது. மற்ற நேரங்களில் புற்கள் அடர்த்தியாக வளர்ந்து, வீரர்கள் பயிற்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் அதிலும் வீரர்கள் தங்களின் விளையாட்டிற்கு பயிற்சி பெறுகின்றனர்.
விழுப்புரத்தில் வீரர்கள் பயிற்சி பெற போதிய மைதானம் இல்லாத சூழலில், வடக்கு ரயில்வே குடியிருப்பில் உள்ள மைதானத்தை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.