/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழியேற்பு
/
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழியேற்பு
ADDED : ஜூன் 12, 2025 10:45 PM
விழுப்புரம்; குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை யொட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு, கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் திண்டிவனம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மூலம் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களான விஷ்ணு, உதயகுமார் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
முன்னதாக, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (மாநில நெடுஞ்சாலை) ராஜகுமார், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதே போன்று, விழுப்புரம் மண்டல அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில், தலைமை அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பொதுமேலாளர் ரவீந்திரன் (தொழில்நுட்பம்) உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவெண்ணெய்நல்லுார்
காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல ஆலோசகர் முருகன் தலைமை தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.இதேபோல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஏமப்பூர் மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் இந்நிகழ்ச்சி நடந்தது.