/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது! 21,879 மாணவர்கள் பங்கேற்பு
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது! 21,879 மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது! 21,879 மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது! 21,879 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : மார் 02, 2024 05:56 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. 104 மையங்களில் நடந்த தேர்வை 21,879 மாணவர்கள் எழுதினர்.
தமிழகம் முழுவதும் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று 1ம் தேதி துவங்கியது. வரும் 22ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48, விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 என 104 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்து 879 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
நேற்று காலை 10:00 மணிக்கு தேர்வு துவங்கியது. தமிழ் பாடத்துக்கான வினாத்தாள் வழங்கப்பட்டு 10 நிமிடம் அதனை வாசிக்க நேரம் வழங்கப்பட்டது. பிறகு 10:10 மணிக்கு விடை தாள் வழங்கப்பட்டது. 10.15 முதல் தேர்வு துவங்கியது.
முன்னதாக காலை 9:00 மணிக்கே மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்து தயாராக இருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படையினர், தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.
தேர்வு பணியில் 2459 பேர்
தேர்வுப் பணியில் 5 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 105 துறை அலுவலர்கள், 28 வழித்தட அலுவலர்கள், 94 பறக்கும் படைனர், 1,737 அறை கண்காணிப்பாளர்கள், 145 சொல்வதை எழுதுபவர்கள், 240 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 2,459 பேர், தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
145 மாற்றுத் திறன் மாணவர்கள் பங்கேற்பு
மாவட்டத்தின் பல்வேறு மையங்களில் கண் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைவு, மனநலம் குன்றிய மற்றும் நரம்பியல் குறைபாடு உடைய மாணவர்கள் 145 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு சொல்வதை எழுதும் 145 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில், முன்னதாக காலை 9:30 மணிக்கு தேர்வு அறைகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர் பழனி, தேர்வு எழுதும் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, 'இத்தேர்வு உங்களுடைய எதிர்கால வாழ்வினை தீர்மானிக்கும் தேர்வு என்பதால், கவனமுடன், வினாத்தாள்களைப் படித்துப் பார்த்து நன்கு தேர்வு எழுத வேண்டும். பொதுத்தேர்வினை எவ்வித அச்சமும் இன்றி, சிந்தனைகளை சிதற விடாமல், தேர்வு முடியும் வரை, நாள்தோறும் பாடங்களை படித்து, சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்' என்றார்.
இதனையடுத்து, விழுப்புரத்தில் உள்ள பிற தேர்வு மையங்களை ஆய்வு செய்தார், அப்போது அவர் கூறுகையில், 'பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், குடிநீர் வசதி, கழிவறை, தடையில்லா மின்சார வசதி, போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் மாணவர்கள் சென்றிட சிறப்பு பஸ் வசதியும், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு சென்றிட ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்றார். ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

