/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.எம்., கிசான் உதவித்தொகை தனி அடையாள எண் கட்டாயம்
/
பி.எம்., கிசான் உதவித்தொகை தனி அடையாள எண் கட்டாயம்
பி.எம்., கிசான் உதவித்தொகை தனி அடையாள எண் கட்டாயம்
பி.எம்., கிசான் உதவித்தொகை தனி அடையாள எண் கட்டாயம்
ADDED : ஜூன் 25, 2025 01:07 AM
விழுப்புரம், : பி.எம்., கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள், வரும் 30ம் தேதிக்குள் தனி அடையாள எண் பெற அறிவுறுத்தப்படுகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
விழுப்புரம்மாவட்டத்தில் பி.எம்., கிசான் ஊக்கத் தொகை பெறும் 89,958 விவசாயிகளில், 65,336 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 24,622 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் விவரங்களுடன் வேளாண் துறை அலுவலர்களையோ, அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்புகொண்டு உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும். வரும் 30ம் தேதிக்குள் பி.எம்., கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தனி அடையாள எண் பெற அறிவுறுத்தப்படுகிறது.
இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என 19 தவணைகளாக பி.எம்., கிசான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.