/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க செயற்குழு கூட்டம்
/
பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : செப் 16, 2025 06:20 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில், விழுப்புரம் மாவட்ட பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார்.திண்டிவனம் நகர செயலாளர் மணிகண்டன், நகர வன்னியர் சங்க செயலாளர் செந்தில் நிர்வாகிகள் சவுந்தர், தினகர் முன்னிலை வகித்தனர்.
மாநில வன்னியர் சங்க துணைச் செயலாளர் ராஜேந்திரன், செயலாளர் பரணிதரன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் பெருமாள் பேசினர்.
கூட்டத்தில் நாளை 17ம் தேதி காலை 8:30 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இடஒதுக்கீட்டு போராட்டத்தின் போது உயிர் நீத்த தியாகிகள் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பது.
தொடர்ந்து திண்டிவனத்தில் காலை 9:00 மணியளவில் நடைபெறும் தியாகிகள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், பா.ம.க.,மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.