ADDED : மார் 30, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனத்தில் பா.ம.க., நகர பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், மாநில சமூக பேரவை செயலாளர் பாலாஜி சிறப்புரையாற்றினர். மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன்ரமேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சம்பத், நகர தலைவர் ரவி, இலக்கிய பிரிவு பொன்மொழி, முன்னாள் கவுன்சிலர்கள் சவுந்தர், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்பது என என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.