/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம்
/
பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : நவ 02, 2025 11:41 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர்கள் ஸ்டாலின், பாவாடைராயன், கோபால் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார்.கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், மாநில மாணவரணி சங்க செயலாளர் திலீபன் பிரபாகர் தாஸ் ஆகியோர் கட்சி வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் குறித்தும் பேசினர்.
ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர்கள் அய்யனார், திரு, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தமிழழகன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், லட்சுமி நாராயணன், சங்கர், செல்வம், பாலா, துரை, குபேந்திரன், காமராஜ், குழந்தைவேல், ராமச்சந்திரன், சந் தோஷ், ஒன்றிய தலைவர்கள் அன்னியூர் சதாசி வம், வெங்கடேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

