/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
18ம் தேதி பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம்
/
18ம் தேதி பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : நவ 13, 2025 09:05 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் வரும் 18ம் தேதி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.
தைலாபுரம் பா.ம.க., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நாளை 15ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் காலை 10:00 மணியளவில் நடைபெறும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து வரும் 18ம் தேதி காலை திண்டிவனத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அம்மா திருமண மண்டபத்தில் நடைபெறும் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும், 19ம் தேதி காலை 10:00 மணியளவில் நடைபெறும் பா.ம.க.,மாநில இளைஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

