ADDED : டிச 09, 2025 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் கிழக்கு ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ரகு (எ) ராகவேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்கள் வானுார் தொகுதி பொறுப்பாளர் தர்மா (எ) தர்மலிங்கம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கிழக்கு ஒன்றியத்தில் பொறுப்பாளர்கள் நியமிப்பது. அனைத்து கிளைகளிலும் கொடியேற்றுவது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மாவட்ட தலைவர் சேது, மாநில துணைத் தலைவர் சம்பத், கொள்கை அணி துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் கோபால், மாநில அமைப்பு துணைச் செயலாளர் சவுந்தர் பங்கேற்னர்.
பொருளாளர் நாகேஸ்வரி நன்றி கூறினார்.

