/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நிவாரணம் வழங்க கோரி பா.ம.க.,வினர் சாலை மறியல்
/
வெள்ள நிவாரணம் வழங்க கோரி பா.ம.க.,வினர் சாலை மறியல்
வெள்ள நிவாரணம் வழங்க கோரி பா.ம.க.,வினர் சாலை மறியல்
வெள்ள நிவாரணம் வழங்க கோரி பா.ம.க.,வினர் சாலை மறியல்
ADDED : டிச 14, 2024 03:47 AM

மயிலம்: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி பா.ம.க., சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிவகுமார் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்டத் தலைவர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் நேற்று மதியம் 1:45 மணிக்கு மறியல் போராட்டம் துவங்கியது.
தகவல் அறிந்த திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், தாசில்தார் சிவா, டி.எஸ்.பி., பிரகாஷ், மயிலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து 2:45 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பா.ம.க ., பொதுக்குழு உறுப்பினர் செங்கேணி, ஒன்றிய செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், சேட்டு, ராஜி, சண்முகம், தொழிற்சங்க செயலாளர் தேசிங்கு உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.