/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்
/
திண்டிவனத்தில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 03, 2025 01:55 AM

திண்டிவனம்: பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்ததை கண்டித்து, திண்டிவனத்தில் பா.ம.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டத்து, பா.ம.க.,மகளிர் அணி சார்பில் பசுமை தாயக தலைவர் சவுமியா அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்திய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து, நேற்று மாலை திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.,செயலாளர் ஜெயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில சமூக நீதிப்பேரவை செயலாளர் பாலாஜி, பா.ம.க.,நகர செயலாளர் மணிகண்டன், கவுன்சிலர் ேஹமமாலினி, சிறுபான்மை அணி பிச்சைமுகமது, மாவட்ட துணை செயலாளர் சேகர், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், முன்னாள் கவுன்சிலர் செந்தில், இளைஞரணி குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

