/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'
ADDED : மே 04, 2025 04:12 AM
செஞ்சி : சிறுமியை திருமணம் செய்தவர் மீது போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்தனர்.
செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் மேல்மலையனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 8 மாத கர்ப்பத்துடன், மருத்துவ பரிசோதனை மற்றும் கர்ப்ப கால தடுப்பூசி போட சென்றார். சிறுமிக்கு 15 வயதே ஆனதால் சுகாதாரத் துறையினர், சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், செவலைபுரையை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சின்னராசு, 19; சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தததால், கர்பமானது தெரிய வந்தது.
மேல்மலையனுார் மகளிர் ஊர் நல அலுவலர் ஜூவாலாமாலினி கொடுத்த புகாரின் பேரில், சின்னராசு மீது செஞ்சி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.