ADDED : ஏப் 10, 2025 04:36 AM

விழுப்புரம்: விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து போலீஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கினார். நிலுவை வழக்குகள் குறித்து ஆலோசனை நடந்தது. வாகன விபத்து வழக்குகளில் அடையாளம் தெரியாத வாகனங்களை கண்டுபிடிக்கவும், குற்ற வழக்குகளில் எதிரிகளை கண்டுபிடிக்க சி.சி.டி.வி., கேமராக்கள் அதிக அளவில் பொருத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. குற்ற தடுப்பு நடவடிக்கையாக இருள் சூழ்ந்த பகுதிகளில் தெருவிளக்கு, சி.சி.டி.வி., அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் திருமால், தினகரன், இளமுருகன், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, டி.எஸ்.பி.,க்கள் பிரகாஷ், நந்தகுமார், உமாதேவி, கார்த்திகபிரியா, கைரேகை பிரிவு ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.