/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகளுடன் தாய் மாயம்; போலீஸ் விசாரணை
/
குழந்தைகளுடன் தாய் மாயம்; போலீஸ் விசாரணை
ADDED : ஆக 19, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; இரண்டு குழந்தைகளுடன், தாய் காணாமல் போனது குறித்த போலீசார் விசாரிக்கின்றனர்.
செஞ்சி தாலுகா, செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி மனைவி தமிழ்ச்செல்வி, 25; இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மஞ்சுபிரியா, 4; மற்றும் பத்து மாத குழந்தை மணிகண்டன் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்செல்வி குடும்பத்துடன் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டில் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 17ம் தேதி வீட்டி லிருந்து தனது குழந்தைகளுடன் வெளியில் சென்ற தமிழ்ச்செல்வி மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.