/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாங்கிய குழந்தை இறப்பு போலீஸ் விசாரணை
/
துாங்கிய குழந்தை இறப்பு போலீஸ் விசாரணை
ADDED : அக் 18, 2024 11:31 PM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த செட்டிக்குப்பத்தில் துாங்கிய 4 மாத குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ஓமந்துாரைச் சேர்ந்தவர் கோகிலன், 28; இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் தாய் வீடான மரக்காணம் அடுத்த செட்டிக்குப்பத்திற்கு சில தினங்களுக்கு முன் தனது 4 மாத மகன் மிதர்ஷன் மற்றும் கணவருடன் வந்து தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி குழந்தை மிதர்ஷனுக்கு தாய்பால் கொடுத்துவிட்டு துாங்கி வைத்துள்ளார்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது குழந்தை மிதர்ஷன் அசைவின்றி இருந்ததால், மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.