ADDED : ஏப் 25, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வீட்டிலிருந்து வெளியில் சென்ற பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி செங்கேணி, 54; ஞாபக மறதியுடைய இவர், கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.