ADDED : செப் 27, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் அடுத்த சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் பிரகதீஸ்வரி, 22; இவர், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது தாய் ஜெயசீலா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.